என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷாய் ஹோப்"
- அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.
- இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி அசத்தியது.
லண்டன்:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 263 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி, தொடரையும் கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
முதலாவது இன்னிங்சில் 4-வது ஓவரின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது 2 பேர் ஸ்லிப்பில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை.
அடுத்த பந்தின்போது ஸ்லிப்பில் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால் கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த ஓவரை ஜோசப் மெய்டன் ஓவராக வீசினார்.
பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப்பிடம் எதுவும் தெரிவிக்காததால் அந்த ஓவர் முடிந்தபின் ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.
அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால், மாற்று வீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். இதனால் பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
- வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
- சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன்.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி நேற்று ஆன்ட்டிகுவா நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிராவ்லி 48 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.5 ஓவரிலேயே இலங்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சதம் விளாசிய ஷாய் ஹோப் (109) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் டோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன். அப்போது நீங்கள் நினைப்பதை விட எப்போதுமே உங்களுக்கு களத்தில் அதிக நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வார்த்தைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டது.
செபார்ட் சிறப்பாக விளையாடினார். இத்தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியை பெற்றுள்ள நாங்கள் அதை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என்று நம்புகிறேன். எங்களின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். இதே போன்ற துவக்கத்தை அடுத்த போட்டியில் அவர்கள் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும் உலகின் சிறந்த அணியாக நீங்கள் இருப்பதற்கு சில கேட்ச்களை தவற விடக்கூடாது. இதே நல்ல செயல்பாடுகளை நாங்கள் அடுத்த போட்டிகளிலும் தொடர்வதற்கு பார்க்க வேண்டும்.
என்று கூறினார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 335 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 287 ரன்களில் ஆல் அவுட்டானது.
கேப் டவுன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 128 ரன்னில் அவுட்டானார். ரோமன் பாவெல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். குயிண்டன் டி காக் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பவுமா சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பவுமா 118 பந்தில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 41.4 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 48 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களை எடுத்தது.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதமடித்து 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் சதமடித்தார்.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
முல்தான்:
வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றியது. கொரோனா பரவலால் ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஷமார் புருக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 70 ரன்னில் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பஹர் சமான் 11 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் வெளியேறினார். மொகமது ரிஸ்வான் 59 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
50 ஓவர் உலகக்கோப்பையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. மேலும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்னை எட்டும் முதல் அணியாக இங்கிலாந்து இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நாங்கள்தான் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற சாதனையை படைப்போம் என ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாய் ஹோப் கூறுகையில் ‘‘500 ரன்களை எட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. முயற்சி செய்தால் இந்த அரிய சாதனையை எங்களால் படைக்க இயலும். 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற பெயர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிகப்பெரிய பேட்டிங் ஆர்டரை வைத்திருக்கும் எங்களால் இந்த சாதனையை எட்ட முடியும்’’ என்றார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பிராத்வைட் கூறுகையில் ‘‘இந்த சாதனையை உங்களால் எட்ட முடியுமா?, அதற்கான சாத்தியக்கூறுகள் உங்களிடம் உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக இருக்கு என்பேன். எனினும், அதிகாரப்பூர்வமான ஆட்டங்களில் 10-ம் நிலை வீரர்கள் வரை சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க வாய்ப்பில்லை. இதனால், எதார்த்தமான ஸ்கோர் குறித்து நாம் பேசுவது அவசியம்’’ என்றார்.
அந்த்ரே ரஸல்
கிறிஸ் கெய்ல் 22 பந்தில் 36 ரன்களும், லிவிஸ் 54 பந்தில் 50 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஜேசன் ஹோல்டர் 32 பந்தில் 47 ரன்களும், அந்த்ரே ரஸல் 25 பந்தில் 54 ரன்களும் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
ஹோல்டர்
பின்னர் 422 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
ஷாய் ஹோப்
ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் ரோஸ்டன் சேஸ் (54), ஹெட்மையர் (56 அவுட் இல்லை) ஆகியோரும் அரைசதம் அடித்தனர். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 82.4 ஓவர் வரை 240 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் 6 ஓவர்களுக்குள் விரைவாக நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.
பென் ஸ்டோக்ஸ்
இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் 89.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. ஹெட்மையர் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
ஹெட்மையர்
இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. லெவிஸ் - ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 14 ரன்னிலும், ஹெட்மையர் 19 ரன்னிலும் வெளியேறினார்கள்.
அதிரடி காட்டிய ஷாய் ஹோப் 19 பந்தில் 6 பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆர் பொவேல் 34 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 175 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதனால் தொடர் 1-1 சமநிலையில் உள்ளது. 3-வது டி20 கிரிக்கெட் போட்டி 22-ந்தேதி நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.
அதன்படி தமிம் இக்பால். லித்தோன் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமிம் இக்பால் 5 ரன்னிலும், லித்தோன் தாஸ் 6 ரன்னிலும், சவுமியா சர்கார் 5 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடி 43 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவருக்குப்பின்னால் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியே வங்காள தேசம் 19 ஓவரில் 129 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் காட்ரெல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. லெவிஸ், ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 11 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய காட்ரெல்
அடுத்து பூரம், கீமோ பால் ஆகியோர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். பூரம் 17 பந்தில் 23 ரன்களும், கீமோ பால் 14 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்களும் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவரிலேயே 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
55 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது ஆட்டம் 20-ந்தேதி நடக்கிறது. வங்காள தேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 2 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பை என்பதால் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கின. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. ஷாய் ஹோப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மற்ற வீரர்களை மெஹிதி ஹசன் சொற்ப ரன்களில் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் தடம் புரண்டது. ஹசன் 10 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
ஷாய் ஹோப் நம்பிக்கையுடன் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர் லித்தோன் தாஸ் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து தமிம் இக்பால் உடன் சவுமியா சர்கார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சவுமியா சர்கார் 81 பந்தில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
சதம் அடித்த ஷாய் ஹோப்
அடுத்து தமிம் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். தமிம் இக்பால் 81 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க வங்காள தேசம் 38.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதையும், மெஹிதி ஹசன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.
பின்னர் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஹேம்ராஜ் (3), அடுத்து வந்த டேரன் பிராவோ (27), சாமுவேல்ஸ் (26), ஷிம்ரோன் ஹெட்மையர் (14) குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 144 பந்தில் 146 ரன்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளைமறுநாள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்